2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழில் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம்

Editorial   / 2022 ஜனவரி 18 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105ஆவது பிறந்த தினம்,  யாழ். எம்.ஜி.ஆரின் சொந்த நிதியில் யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னால் நேற்று (17) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, அண்மையில் இயற்கை எய்திய யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் நினைவாக அவர்களது குடும்பத்தினரால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான விளங்கிய யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில், ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர் நினைவேந்தல்கள் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் அண்மையில் இயற்கை எய்தினார்.

அவரின் குடும்பத்தினரால் எம்.ஜி.ஆர் சிலை புது பொலிவுடன் அமைக்கப்பட்டதுடன், யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மற்றும் எம்.ஜி.இராமச்சந்திரனின் படங்கள் கல்வெட்டுக்களாக பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .