2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 09 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான போட்டியில் இரண்டு அணிகளும் இன்னும் இருக்கின்ற நிலையில் இத்தொடரானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.

இரவிச்சந்திரன் அஷ்வினின் மாதிரிப் பந்துவீச்சாளரிடம் வலைப்பயிற்சி, சுழற்பந்துவீச்சு ஆடுகளங்களில் பயிற்சி எனப் பலதரப்பட்ட தயார்படுத்தல்களுடன் இந்தியாவுக்கு அவுஸ்திரேலியா சென்றுள்ளபோதும் களத்தில் அஷ்வின் மற்றும் இரவீந்திர ஜடேஜாவை எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்பதிலேயே தொடரின் முடிவு தங்கியிருக்கப் போகிறது.

அவுஸ்திரேலிய அணியில் நேதன் லையனோடு இரண்டாவது சுழற்பந்துவீச்சாளராக டொட் முர்பியும், அணித்தலைவர் பற் கமின்ஸோடு இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக ஸ்கொட் போலண்டும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர ஆறாமிலக்க வீரராக பீற்றர் ஹன்ட்ஸ்கொம்ப் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக குல்டீப் யாதவ், விக்கெட் காப்பாளர் கே.எஸ். பாரத், மத்தியகளத்தில் ஷுப்மன் கில்லும், அணித்தலைவராக றோஹித் ஷர்மாவோடு ஆரம்பத்துடுப்பாட்டவீரராக லோகேஷ் ராகுலும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த போட்டிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ராகுல் ஓட்டங்களைப் பெறுவது அவசியமாவதுடன், ராகுலைப் போன்றில்லாவிட்டாலும் விராட் கோலியும் ஏனைய வகைப் போட்டிகளைப் போல ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X