2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே கிரிக்கெட் போட்டிக்கு வாய்ப்பு இல்லை

Editorial   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய அணியுடன் இப்போதுள்ள சூழலில் இரு நாட்டு கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்த இசான் மணியின் பதவிக்காலம் ஓகஸ்ட் 25 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைமை புரவலரும், அந்த நாட்டின் பிரதமருமான இம்ரான் கான் விரும்பவில்லை. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற செய்தி ஏற்கெனவே பரவியது.

இதனையடுத்து இசான் மணி மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா ஆகிய இருவரும் அண்மையில் பிரதமர் இம்ரான் கானுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ரமீஸ் ராஜாவை நியமிக்கும்படி பிரதமர் இம்ரான் கான் முன்மொழிந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருந்தது.

முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக வாய்ப்புள்ள பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஜித் கானின் பெயரும் அடிபட்டிருந்தது. ஆனால் மஜித் கான், பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உறவினர் என்பதால்தான் அப்பதவியை ஏற்க விரும்பவில்லை எனத் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .