2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இந்தியாவை வீழ்த்துமா நியூசிலாந்து?

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 27 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, ராஞ்சியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

அணித்தலைவர் றோஹித் ஷர்மா, விராட் கோலி, மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, லோகேஷ் ராகுல், இரவீந்திர ஜடேஜா, அக்ஸர் பட்டேல் போன்றோ இத்தொடரில் இல்லாத நிலையில், பிறித்திவி ஷோ, ராகுல் ட்ரிபாதி, ருத்துராஜ் கைகவாட், ஜிதேஷ் ஷர்மா போன்றோருக்கு இத்தொடர் வாய்ப்பாகக் காணப்படுகின்றது. தவிர, அர்ஷ்டீப் சிங் தன்னை தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் வீரராக நிரூபிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, கேன் வில்லியம்ஸன், டிம் செளதி, ட்ரெண்ட் போல் உள்ளிட்டோரில்லாத நிலையில் மிற்செல் சான்ட்னரில் தலைமையில் களமிறங்கும் நியூசிலாந்தின் வெற்றி வாய்ப்புகள், டெவோன் கொன்வே, கிளென் பிலிப்ஸ், மார்க் சப்மன், பின் அலென் போன்றோரிலேயே தங்கியுள்ளது.

லொக்கி பெர்கியூசன், சான்ட்னர் தவிர பந்துவீச்சு அனுபவமற்றதாகக் காணப்படுகின்ற நிலையில், இஷ் சோதி முழுமையான உடற்றகுதியைப் பெறுவது முக்கியமானதாகக் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .