2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ஹர்டிக் பாண்டியா

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்டிக் பாண்டியா முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது போட்டியில் 30 ஓட்டங்களைப் பெற்றதோடு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையிலேயே தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. ஹர்டிக் பாண்டியா 3. மொஹமட் நபி, 4. வனிடு ஹஸரங்க, 5. ஜெ.ஜெ. ஸ்மித்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. சூரியகுமார் யாதவ், 2. மொஹமட் றிஸ்வான், 3. பாபர் அஸாம், 4. டெவோன் கொன்வே, 5. ஏய்டன் மார்க்ரம், 6. டேவிட் மலான், 7. றீலி றொஸோ, 8. ஆரோன் பின்ஞ், 9. கிளென் பிலிப்ஸ், 10. அலெக்ஸ் ஹேல்ஸ்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ரஷீட் கான், 2. வனிடு ஹஸரங்க, 3. அடில் ரஷீட், 4. ஜொஷ் ஹேசில்வூட், 5. சாம் கர்ரன், 6. தப்ரையாஸ் ஷம்சி, 7. அடம் ஸாம்பா, 8. முஜீப் உர் ரஹ்மான், 9. அன்றிச் நொர்கியா, 10. மிற்செல் சான்ட்னெர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X