2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கை எதிர் பங்களாதேஷ்: வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த முதலாவது டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2022 மே 19 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், சட்டோகிராமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இப்போட்டியின் இன்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இலங்கை குசல் மென்டிஸ் மூலம் வேகமாக ஓட்டங்களைச் சேர்த்தது.

இந்நிலையில், 48 ஓட்டங்களுடன் தஜியுல் இஸ்லாமிடம் குசல் மென்டிஸ் வீழ்ந்ததோடு, அடுத்து வந்த அஞ்சலோ மத்தியூஸும் ஓட்டமெதுவும் பெறாமலே தஜியுஸ் இஸ்லாமிடம் வீழ்ந்தார். பின்னர் குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களுடன் தஜியுல் இஸ்லாமிடம் வீழ்ந்தார். சிறிது நேரத்தில் தனஞ்சய டி சில்வாவும் 33 ஓட்டங்களுடன் ஷகிப் அல் ஹஸனிடம் வீழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து தினேஷ் சந்திமாலும், நிரோஷன் டிவெல்லவும் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைவதை உறுதிப்படுத்தியிருந்தனர். போட்டி முடிவுக்கு வருகையில் நிரோஷன் டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 61, தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களைப் பெற்றவாறு இருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக அஞ்சலோ மத்தியூஸ் தெரிவானார்.

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 397/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 199, தினேஷ் சந்திமால் 66, குசல் மென்டிஸ் 54, ஒஷாத பெர்ணாண்டோ 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: நயீம் ஹஸன் 6/105, ஷகிப் அல் ஹஸன் 3/60, தஜியுல் இஸ்லாம் 1/107)

பங்களாதேஷ்: 465/10 (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 133, முஷ்பிக்கூர் ரஹீம் 105, லிட்டன் தாஸ் 88, மஹ்முடுல் ஹஸன் ஜோய் 58, ஷகிப் அல் ஹஸன் 26, தஜியுல் இஸ்லாம் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 4/60, அசித பெர்ணாண்டோ 3/72, தனஞ்சய டி சில்வா 1/48, லசித் எம்புல்தெனிய 1/104)

இலங்கை: 260/6 (துடுப்பாட்டம்: நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 61, திமுத் கருணாரத்ன 52, குசல் மென்டிஸ் 48, தினேஷ் சந்திமால் ஆ.இ 39, தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/82, ஷகிப் அல் ஹஸன் 1/58)

போட்டியின் நாயகன்: அஞ்சலோ மத்தியூஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X