2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உதைப்பந்தாட்ட சுற்று போட்டி; ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி

Freelancer   / 2022 ஜூலை 04 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் எஸ் எம் நூர்தீன்

காத்தான்குடி உதைப்பந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியம் நடாத்திய வெற்றி கின்னத்திற்கான உதைப்பந்தாட்ட சுற்று போட்டியில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று வெற்றி திண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

காத்தான்குடி உதைப்பந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியம் நடாத்திய உதை பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(03) இரவு காத்தாங்குடி விக்டரி விளையாட்டு கழக மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் ஏறாவூர் வை. எஸ் எஸ் சி அணியும், ஏறாவூர் லக்கி ஸ்டார் அணியும் மோதியது. இதில் ஏறாவூர் லக்கி ஸ்டார் அணி ஒரு கோளை போட்டு வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழா காத்தான்குடி உதைபந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாபிழ் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற, இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம். எல். ஏ.எம். ஹிஸ்பூல்லாஹ் கலந்து கொண்டார்.

இதில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி உதைப்பந்தாட்ட லீக் தலைவர் சட்டத்தரணி ஜலீல் செயலாளர் ரமீஷ் ராஜா மற்றும் நகரசபை உறுப்பினர்கள் காத்தான்குடி உதைப்பந்தாட்ட அபிவிருத்த ஒன்றியத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இதன் போது வெற்றி பெற்ற ஏறாவூர் லக்கி ஸ்டார் அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் பண பரிசும் வெற்றிகிண்ணமும், இரண்டாவது இடத்தை பெற்ற ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணிக்கு 30,000 ரூபா பணப்பரிசும், மூன்றாவது இடத்தை பெற்ற காத்தான்குடி பதுறியா அணிக்கு 10 ஆயிரம் ரூபா பணப்பரிசும் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய காத்தாங்குடி பதுறியா விளையாட்டு கழக வீரருக்கு பணப்பரிசும் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X