2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உலகக் கிண்ணம்: காலிறுதியில் ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 04 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாரில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனாவும், நெதர்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

இன்று அதிகாலை நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுத் தொடரில், 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டீனா தகுதி பெற்றது.

ஆர்ஜென்டீனா சார்பாக, லியனல் மெஸ்ஸி, ஜூலியன் அல்வரேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அவுஸ்திரேலியா சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே நெதர்லாந்து காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. நெதர்லாந்து சார்பாக, மெம்பிஸ் டிபே, டேலி பிளைன்ட், டென்ஸில் டம்ஃப்ரைஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஐக்கிய அமெரிக்கா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹஜி றைட் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .