2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: காலிறுதியில் பிரேஸில், குரோஷியா

Shanmugan Murugavel   / 2022 டிசெம்பர் 06 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


கட்டாரில் நடைபெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு பிரேஸில், குரோஷியா ஆகியன தகுதி பெற்றுள்ளன. 

இன்று அதிகாலை நடைபெற்ற தென்கொரியாவுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதி பெற்றது. 

பிரேஸில் சார்பாக, வின்ஷியஸ் ஜூனியர், நெய்மர், றிஷலிஷன், லூகாஸ் பக்கெட்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். தென்கொரியா சார்பாகப் பெறப்பட்ட கோலை பைக் செயுங்-ஹோ பெற்றிருந்தார். 

இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற ஜப்பானுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் பெனால்டியில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி பெற்றிருந்தது. 

போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மேலதிக நேர முடிவிலும் அதே கோல் கணக்கிலேயே இருந்த நிலையில் 3-1 என்ற ரீதியில் பெனால்டியிலேயே குரோஷியா வென்றிருந்தது. இதில், ஜப்பானின் மூன்று வீரர்களின் உதைகளை குரோஷிய கோல் காப்பாளர் தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .