2025 ஜூலை 19, சனிக்கிழமை

நஸீர் ஜம்ஷெட்டுக்கு ஓராண்டுத் தடை

Editorial   / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் ஸ்பொட் பிக்ஸிங் வழக்கில் ஒத்துழைக்காத குற்றம் புரிந்தார் என மோசடிக்கெதிரான தீர்பாயமொன்று கண்டுபிடித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் நஸீர் ஜம்ஷெட்டுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் ஓராண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் நடைபெற்ற விடயம் தொடர்பாக தண்டனைக்குள்ளாகும் ஐந்தாவது வீரர் நஸீர் ஜம்ஷெட் ஆவார். ஷர்ஜீல் கான், காலிட் லத்தீவ், மொஹமட் இர்பான், மொஹமட் நவாஸ் ஆகியோருக்கு தண்டப் பணம் விதிக்கப்பட்டிருந்ததோடு, தடைகளையும் எதிர்நோக்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X