2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முழந்தாளிட மறுத்து அணியிலிருந்து விலகிய டி கொக்

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கறுப்பு உயிர்கள் பெறுமதியானவை என்ற நகர்வுக்காக முழந்தாளிட மறுத்து இன்று இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான சர்வதேச கிரிக்கெட் சபையின் சுப்பர் 12 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் குயின்டன் டி கொக் விலகியுள்ளார்.

இத்தொடரின் முதலாவது அவுஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியில் சில வீரர்கள் முழந்தாளிட்டதுடன், சிலர் கைகளை உயர்த்திக் காண்பித்ததுடன், சிலர் சும்மர் நின்றிருந்தனர்.

இந்நிலையில், இனிமேல் அனைத்துப் போட்டிகளிலும் முழந்தாளிட வேண்டுமென தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கட்டளை வழங்கியிருந்தது.

அந்தவகையில், மேலதிக நடவடிக்கைகாக அணி முகாமைத்துவத்தின் அறிக்கையை எதிர்பார்ப்பதாக கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .