2025 மே 14, புதன்கிழமை

அணில் குஞ்சால் விபத்து; மூவர் படுகாயம்

வடிவேல் சக்திவேல்   / 2019 ஜனவரி 25 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுவாஞ்சிகுடியில் இன்று (25) காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர், வீதியைக் குறுக்கீடு செய்த அணில் குஞ்சுக்கு வழி விடுவதற்காகத் திடீரென, மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

அதேவேளை, செட்டிபாளையம் பகுதியிலிருந்து வந்த ஓட்டோ, மோட்டார் சைக்கிளில் மோதியதால் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X