Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 ஜனவரி 10 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக, நாளைய தினம் (11) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு வலியுறுத்தி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பெயரைப் பயன்படுத்தி விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்கள் தொடர்பில், அந்த முன்னணியின் காத்தான்குடி முக்கியஸ்தர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, பொலிஸில் இன்று (10) முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறான துண்டுப் பிரசுரங்களை வெளியீடுவோரைக் கண்டுபிடித்து, அவர்களை, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் அந்தத் துண்டுப் பிரசுரத்துக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும், எவ்விதத் தொடர்பும் இல்லையெனவும், அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலிருக்கின்ற ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக, சில தீய சக்திகள் முயற்சிப்பதாகவும், நழீமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
24 minute ago