2025 மே 14, புதன்கிழமை

ஆறு மாத காலத்தில் 306 நாய்களுக்கு கருத்தடை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 24 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம காலத்தில் அதிகரித்துள்ள தெருநாய்களின் பெருக்கத்தைக் குறைக்கும் முகமாகவும் மனிதர்களை விசர் நாய்க்கடியிலிருந்து பாதுகாக்கும் முகமாகவும் நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மட்டக்களப்பு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த கால்நடை வைத்தியர் எம்.அப்துல் ஹாதி தெரிவித்தார்.

தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் விலங்கு விசர் தடுப்பூசி ஏற்றும்   நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டும் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக விவரம் தந்து கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

“நகர பிரதேசங்களில் அலைந்து திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை செய்வதுடன், விலங்கு விசர் தடுப்பூசி ஏற்றி அதன்மூலம் மனிதர்களை விசர் நாய்க்கடியிலிருந்து பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“கடந்த ஆண்டின் கடைசி 6 மாத காலப்பகுதியில், மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல உள்ளூராட்சிமன்றப் பிரதேசங்களிலும் அலைந்து திரியும் தெருநாய்கள் விரட்டிப் பிடிக்கப்பட்டு, 5,422 நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டது.

“அத்துடன், கடந்த ஆண்டின் இறுதி ஆறு மாத காலப்பகுதியில் 306 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

“2030ஆம் ஆண்டளவில் விலங்கு விசர் நோய் இல்லாத இலங்கை” என்ற இலக்கை நோய் தமது  நடவடிக்கைகள் நகர்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையில், மட்டக்களப்பு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள கால்நடை வைத்தியர்களான சி. துஷ்யந்தன், பிரியங்கி ரத்னாயக்க, ஏ.பி.டபிள்யூ. உதயனி வத்சலா உட்பட இன்னும் விலங்குப் பொதுச் சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X