2025 மே 14, புதன்கிழமை

‘எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்’

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

“எதிர்க்கத் துணிந்தால் தமிழ் வாழும்; எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்” என, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட உழவர் தின நிகழ்வு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கருணமலைப் பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று (18) நடைபெற்ற போதே, இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றுகையில், “தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானதாக தைப்பொங்கல் விழா விளங்குகின்றது. உழவர்கள் சூரியனுக்கு, பட்டிகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகின்றது. இதனை உழவர்கள் வாழுகின்ற போரதீவுப்பற்று பிரதேசத்தில் கொண்டாடுவதையிட்டு மகிழ்கின்றேன்.

“வேளாண்மை தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்களே. இவ்வாறான பண்பாடுகளை இளம் சந்ததிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்நிகழ்வுகளை மாவட்டமே இணைந்து நடத்துகின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X