2025 மே 14, புதன்கிழமை

ஏறாவூரில் புதிய ஆடைத் தொழிற்சாலை

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் ஆடைத் தொழிற்சாலையொன்று மட்டக்களப்பு, ஏறாவூரில் திங்கட்கிழமை (24) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்; செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்திலிருந்து வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களை தடுக்கும் நோக்கில் இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார்; 2,000 பேருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியும். இது போன்று அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X