2025 மே 14, புதன்கிழமை

‘கள்ளத்தனமான ஒப்பந்தங்களைச் செய்யவில்லை’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எமது அரசாங்கம், கள்ளத்தனமான ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாக, திருட்டுத்தனமாக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தவர்கள் கூறிவருகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டிய, வீடமைப்பு நிர்மாணத்துறை, கலாசார அமைச்சர் சஜித் பிரமேதாஸ, நாங்கள் கள்ளத்தனமான ஒப்பந்தங்களைச் செய்யவில்லை என்றார்.

மட்டக்களப்பு, கும்புறுமூலையில், செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தில் பழமுதிர்சோலை கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (06) நடைபெற்ற போது, அங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேறகண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், நாங்கள் எப்போதும் மக்களின் நலன் சார்ந்து சிந்தித்து ஒப்பந்தங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்தார்.

வீதிகளைப் புனரமைப்பது, கடற்றொழிலாளர்களுக்கு வளமான வாழ்கையை ஏற்படுத்தவும், விவசாயிகளை மேன்மையடையசெய்யயும் மக்கள் மத்தியில் சென்று ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காசுக்கு விலை போகாத மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் காணப்படக்கூடிய வீட்டுப் பிரச்சனைகளை நூற்றுக்கு நூறு சதவீதம் நிவர்த்தி செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

கடந்த காலங்களில் இந்த நாட்டைச் சூரையாடியவர்கள், ஒரு குறுகிய காலத்துக்குள் கள்ள வழியில் பிரதமர் பதவியைக் கைப்பற்றி, கள்ளத்தனமான அமைச்சுகளை உருவாக்கி, மீண்டுமொருமுறை நாட்டைச் சூரையாட தயாரானார்கள் எனக் குற்றஞ்சாட்டிய அவர, அந்தக் கள்ளக் கூட்டத்தை, மக்களின் செல்வாக்கு மூலம் ஜனநாயக வழியில் நாங்கள் துரத்திவிட்டதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .