2025 மே 14, புதன்கிழமை

கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தர் நியமனம்

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஜனவரி 20 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் எவ். சீ. ராகல் நியமிக்கப்பட்டுள்ளார்.  

கிழக்கு பல்கலைக்கழத்தின் தற்போதைய உப வேந்தர் கலாநிதி த. ஜெயசிங்கத்தின் பதவிக்காலம், எதிர்வரும் 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த மாதம் 1ஆம் திகதி நடைபெற்றது.  

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவில், பேராசிரியர் எவ். சீ. ராகல் முதன்மையிலும் கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாவதாகவும், திருமலை வளாக முதல்வர் பேராசிரியர் ரி. கனகசிங்கம் மூன்றாவதாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

பேரவையின் பரிந்துரை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகங்கள் சட்டத்துக்கமைவாக, பேரவையினால் தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

ஜனாதிபதியால், பேராசிரியர் எவ். சீ. ராகல், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக, ஜனவரி 22ஆம் திகதி முதல் நியமிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.     

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X