2025 மே 14, புதன்கிழமை

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நிர்வாக சபை தெரிவு

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ் எம்.நூர்தீன்

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முதலாவது பொதுக்கூட்டம், மட்டக்களப்பு, பார் வீதியிலுள்ள சத்துணா ஹோட்டலில் நேற்று (12) நடைபெற்றது.

முதலில் ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் அடங்கிய யாப்புத் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு, அதிலுள்ள குறை, நிறைகள் தொடர்பில் பலராலும் அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

ஒன்றியத்தின் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி தட்சணா மூர்த்தி சிவநாதன் தெரிவுசெய்யப்பட்டார்.

ஒன்றியத்துக்கான செயலாளராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்தியக் கலாநிதி கந்தசாமி அருளானந்தம் தெரிவுசெய்யப்பட்டார்.

பொருளாளராக வருமானவரி உதவி ஆணையாளர் வைரமுத்து மகேந்திரன், உப செயலாளராக பொறியியலாளர் ஜீ.எல்.யோன்சன், கணக்காளர்களாக மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் முன்னாள் ஓய்வுநிலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ், கிழக்கு பல்கலைக்கழக உதவிக் கணக்காளர் எஸ்.ரெட்னராஜா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து, மூன்று மாவட்டத்திலும் இருந்து மூன்று உப தலைவர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கல்லடி உப்போட்டை – நெச்சிசுமுனை ஸ்ரீ சித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலயத்தின் முகாமையாளர் என்.ஹரிதாஸ், அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆசிரியர் ஏ.குணசேகரன், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து சமூக செயற்பாட்டாளர் ரீ.கிருபாகரன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .