2025 ஜூலை 19, சனிக்கிழமை

கேரளக் கஞ்சா; முகவர்கள் கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளக் கஞ்சாவின் கிழக்கு மாகாண விற்பனைக்கான முக்கிய முகவர்களெனச் சந்தேகிக்கப்படும் இருவர், வாழைச்சேனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

கஞ்சா வாங்குவதாக குறித்த முகவர்களுடன் வாழைச்சேனை பொலிஸார் தொடர்பை ஏற்படுத்தி, கஞ்சாவை ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்துக்கு எடுத்து வருமாறு வேண்டிக் கொண்டதுக்கிணங்க இரண்டு கிலோகிராமா கேரளக் கஞ்சாவை எடுத்த வந்த இரு கஞ்சா வியாபாரிகளையே, ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரில், ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் மூலம் தெரியவந்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்தார்.

இச்சந்தேகநபர்கள் மிக நீண்ட நாட்களாக இப்பிரதேசத்தில் கேரளக் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே, மேற்படி சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவர்களுடன் தொடர்புபட்ட இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக, பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X