2025 மே 14, புதன்கிழமை

கோவில் உண்டியல் பணம் திருட்டு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஜனவரி 24 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு நகர பொலிஸ் பிரிவில், கொக்குவில் கிராமத்திலுள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலிலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்து பணமும் ஆலயத்திலல் பொருத்தப்பட்டிருந்த மின்சார ஒலிபெருக்கி சாதனங்களும் திருடப்பட்டுள்ளதான முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம், நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

கோவில் வழிபாட்டுக்குச் சென்ற பக்தர் ஒருவர், கோவிலின் கூரையோடுகள் கழற்றப்பட்டிருப்பதை அவதானித்து, கோவில் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

இவ்விடயம், மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் பொலிஸார், கோவிலுக்கு வருகை தந்து, நிலைமையைப் பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X