2025 மே 14, புதன்கிழமை

சாய்ப்புச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வருகிறது

கே.எல்.ரி.யுதாஜித்   / 2019 ஜனவரி 24 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பில் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டிருந்த கடை அடைப்பு நடவடிக்கை, மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மாநகர சபையும் மட்டக்களப்பு வர்த்தக சங்கமும் இணைந்து எடுத்த நடவடிக்கைக்கு அமைய, ஞாயிறு தினங்களில் மாநகர சபை எல்லைக்குள் விதிக்கப்பட்ட சாய்ப்புச் சட்டம் வருடப்பிறப்பு, நத்தார், பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களை முன்னிட்டுத் தளர்த்தப்பட்டிருந்தது.

எனினும், பண்டிகைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து, எதிர்வரும் வாரத்தில் இருந்து இந்நடைமுறை மீண்டும் அமுலுக்கு வருவதாக மேயர் அறிவித்துள்ளார்.

பண்டிகைக்காலத்தில் மக்களுக்குச் சிறந்த வர்த்தக சேவையை வழங்கிய வர்த்தக சமூகத்தினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தொடர்ந்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்களை மாநகர சபையின தீர்மானத்துக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் மேயர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X