Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
கே.எல்.ரி.யுதாஜித் / 2019 ஜனவரி 23 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசுகின்ற தமிழ்த் தலைமைகள், தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக, கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் தேர்தல்களில் ஓரணியில் திரள வேண்டுமென, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (22) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் நாடாளுமன்றம், மாகாணசபை போன்றவற்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க, ஓரணியில் திரண்டு, தேர்தல்களில் போட்டியிட முன்வர வேண்டுமென்றும் இதற்குச் சரியான திட்டங்களைத் தீட்டி நடை முறைப்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில், தமிழ்ப் பகுதிகளில், பல அமைப்புகள், தேசியக் கட்சிகள், புதிய அரசியற் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவெனவும் இதனூடாக தமிழர்களின் வாக்குகள் பிரிந்து, தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகின்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை நிவர்த்தி செய்யும் முகமாக, தமிழ்த் தலைமைகள் கிழக்கு மாகாணம் தொடர்பாக பொது உடன்பாட்டுக்கு வரவேண்டுமெனவும் அப்படி உடன்பட்டால் மாத்திரமே, தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago