Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 20 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர பிரதேச மக்களின் ஆரோக்கிய உணவு நுகர்வுக்காக, நஞ்சற்ற உணவுற்பத்தியும் அதன் விற்பனையும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக, அந்நகரத்தின் மேயர் எஸ்.எச். முஹம்மத் அஸ்பர் தெரிவித்தார்.
காத்தான்குடி நகரத்திலுள்ள மீராபாலிகா சதுக்கத்தில், இன்று (20) இந்த இயற்கை நேய நஞ்சற்ற உணவுப் பொருள் விற்பனை நிலையம், நகர மேயரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த நகர மேயர்,
சமகால அவசர இயந்திர வாழ்க்கை முறையில், இயற்கை நேய உணவு உற்பத்தி, நுகர்வு, வாழ்க்கை முறை என்பன தூரமாகிப் போனதால், மனிதர்களும் சூழலும் உபாதைக்குள்ளாகி வருவதால் மீண்டும் மனித சமூகம் பாரம்பரிய நஞ்சற்ற உணவுற்பத்திக்கும் நுகர்வுக்கும் திரும்ப வேண்டும் என்று கூறினார். அதனால், இத்தகைய நஞ்சற்ற உணவு உற்பத்திக்கும் நுகர்வுக்கும் அதன் விற்பனைக்கும் காத்தான்குடி நகர சபை தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் அவசர வாழ்க்கையில் அல்லல் படுவோர் பாரம்பரிய அமைதி வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இவ்விற்பனைச் சந்தையில் இரசாயனங்கள் பாவிக்கப்படாது, இயற்கைப் பசளைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகள், தானியங்கள், நெல்லரிசி (கைக்குத்தரிசி), உப உணவு உற்பத்திப் பொருட்கள், சேதனப் பசளைகள் என்பன இடம்பிடித்திருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
13 May 2025