Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகரைப் பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான குமுதலெட்சுமியின் கணவர், வாவியிலிருந்து இன்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளானெப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை, அழகாபுரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான காளிக்குட்டி சுதாகரன் (வயது 38) என்பவரே சடலமான மீட்கப்பட்டவராவார்.
மீன்பிடித் தொழிலாளியான இவர், தட்டுமுனை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக வலை கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து பொலிஸாரும், மீனவர்களும், பிரதேச பொதுமக்களுமாகத் தேடியும் காணாமல் போனவரைப் பற்றிய எதுவித தயடங்களும் கிடைத்திருக்காத நிலையில், தட்டுமுனை வாவியிலிருந்து நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் வலிப்பு நோய்க் குணம் உள்ளவர் என்று தெரிவித்த உறவினர்கள், ஆற்றில் வலை கட்டும்போது வலிப்பு நோய் ஏற்பட்டதன் காரணமாக வாவியில் வீழ்ந்து, சேற்றில் புதையுண்டிருக்கலாம் என ஊகம் தெரிவித்துள்ள நிலையில், சம்பவம் பற்றிய விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
13 May 2025