Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 ஜனவரி 21 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள எல்லைக் கிராமமான நவகிரிநகர் பிரதேச மக்களின் நன்மை கருதி, புதிய பஸ் சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்புதிய பஸ் சேவை, களுவாஞ்சிகுடியிலிருந்து வெல்லாவெளி, பாலையடிவட்டை ஊடாக நவகிரி நகர்வரை இடம்பெறவுள்ளதென, இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் விஜிதகமசேன தெரிவித்தார்.
கால யுத்த நிலைமைகளின்போது இடம்பெயர்ந்திருந்த இப்பகுதி மக்கள் கடந்த சில வருடங்களில் மீளக் குடியமத்தப்பட்டுள்ளனர்.
எனினும், தமக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் தாம் பல அசசௌகரியங்களையும் நேர விரயத்தையும் பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருவதாக, அதிகாரிகளிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
மேலும், பாலையடிவட்டை, நவகிரிநகர் பிரதேச மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வரை பஸ் வசதியில்லாமல் போக்குவரத்து செய்து வந்த நிலையிலே தற்போது இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது அவர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
பிரதேச மக்களின் வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு, முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி, இலங்கை போக்குவரத்துச் சபையிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இலங்கை போக்குவரத்துச் சபை இந்த பஸ் சேவையை ஆரம்பித்துள்ளது.
புதிய பஸ் சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் சோமசுந்தரம் கணேசமூர்த்தி, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, இலங்கை போக்குவரத்துச் சபையின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஆர்.எம்.டீ. விஜிதகமசேன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago
13 May 2025