Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 17 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான்
“போருக்குப் பின்னரான இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியும் புலம்பெயர் வாழ் மக்களின் பங்களிப்பும்” எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடல், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவின் புலயவெளி பதுளை வீதியில், ஆலய முன்றலில் நாளை மறுதினம் (19) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக, லண்டனில் வாழ்கின்ற இலங்கை தமிழர் அமைப்பு அறிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலை, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இதில் சிவில் அமைப்புகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகள், அரச சிறுவனங்களின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் லண்டனில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர் அமைப்பின் தலைவர் ராஜசிங்கம் ஜெயதேவன், அதன் உறுப்பினரான விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஆகியோர் லண்டனில் இருந்து வருகை தந்து கலந்துகொள்கின்றனர்.
இவ்வமைப்பின் உதவித் திட்டங்கள் தொடர்பாக மக்களின் கருத்துகள் அறிந்துகொள்ளப்படுதுடன், மேலும் எவ்வாறான உதவித் திட்டங்களை எதிர்பார்க்கின்றனர் என்பது தொடர்பாகவும் கருத்துகளை அறிந்து கொள்ளவுள்ளதாகவும் அமைப்பின் தலைவர் ராஜசிங்கம் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
30 minute ago