Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2019 ஜனவரி 20 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது, இங்கு வாழும் முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரமும் உரிமையும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காகப் போராடும் நிலை உருவாகிவிடக்கூடாது என்றும் கூறினார்.
மட்டக்களப்பு - ஏறாவூர் எல்லை நகர் பீ.என்.ஏ. விளையாட்டுக் கழகம், ஐக்கிய இளைஞர் கழகம் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில், நேற்று (19) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஓர் இனத்துக்குரிய நாடு இதவல்ல என்பதாலேயே, அரசியல் தீர்வைக் கோரி வருவதாகவும் பெரும்பான்மை சமூகம், ஏனைய தேசிய இனங்களை அடக்க முடியாது என்றும் தமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்குமாக இருந்தால், முஸ்லிம் மக்களுக்கும் அதிகாரம் சமனாக வழங்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago