Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 ஜனவரி 22 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில், வீதி நிர்மாணப் பணிகளில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக, நேற்றிரவு (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் குற்றஞ்சாட்டினார்.
காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் சுயதீனமான விசாரணைக்குழுவொன்றை நியமித்து, இவற்றை விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் காத்தான்குடியில் தற்போது தரமற்ற வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன எனவும் ஒரு வீதியை நிர்மாணித்து, குறுகிய காலத்துக்குள் அந்த வீதிக்கு மேலால் மற்றொரு வீதி போடப்பட்டுள்ளதாகவும் வீதி நிர்மாணத்தின் போது பயன்படுத்தப்பட்ட கலவை சரியான முறையில் போடப்படாதுள்ளதுடன், வீதியின் அளவு மட்டமும் சரியாகப் பேணப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இவற்றில் பல ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தான் அறிவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவை தொடர்பாகவும் கொந்தராத்துக்காரர்களிடம் அரசியல்வாதிகள் தரகுப் பணம் கோருவதாகவும் தான் ஏற்கெனவே சுட்டிக்காட்டி, ஓர் அறிக்கையை விட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கு காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் விளக்கம் கோரி, கடிதமொன்றை தனக்கு அனுப்பியுள்ளாரெனவும் அக்கடிதத்துக்துத் தான் விளக்கமளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago