Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
கனகராசா சரவணன் / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கடந்த வௌ்ளிக்கிழமை (11) முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் அன்று, மட்டக்களப்பு நகரத்தில் பூட்டப்பட்டிருந்த அரசாங்க வங்கிகள் இரண்டு தொடர்பாக, விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக, பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அத்துடன், அன்றையதினம் பூட்டப்பட்டிருந்த ஏனைய கடைகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு வலியுறுத்தி, “கிழக்கு மக்கள் ஒன்றியம்”, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி” ஆகியவற்றின் பெயரில் அனாமதேய துண்டுப் பிரசுரங்களே விநியோகிக்கப்பட்டிருந்தன.
அந்தத் துண்டுப் பிரசுரத்துக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும், எவ்விதத் தொடர்பும் இல்லையென, அந்த முன்னணியின் காத்தான்குடி முக்கியஸ்தர் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, பொலிஸில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்திருந்தார்.
எனவே, இந்த ஹர்த்தாலுக்கு யார் அழைப்பு விடுத்தது, கடைகளை மூடுமாறு யார் வலியுறுத்தியது போன்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்த தினத்தன்று, கிண்ணியடி பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்று தொடர்பாகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
27 minute ago