2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

புதையல் தோண்டிய மூவர் கைது

Super User   / 2013 டிசெம்பர் 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அக்குறனை, குருகொடை பிரதேசத்திலுள்ள தனியார் காணியில் புதையல் தோண்டியதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட மூன்று பேரை அலவத்துகொடை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் படி  குறித்த இடத்தை முற்றிகையிட்ட பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் கடவத்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும் அதில் இருவர் கனவன் மனைவி எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

நிலத்தை தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பூஜைக்காக கொண்டுவரப்பட்ட பொருட்களும் சொகுசு வாகனமொன்றும் இதன்போது பொலிஸார் கைப்பற்றினர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X