2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

.“எம்மைக் கைவிட்டு விடாதீர்கள்“

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை –சென்- லெனாட்ஸ் மேல்பிரிவு தோட்டம், இலக்கம் 33 தொடர் குடியிருப்பில் வசித்து வரும், 12 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடத்தில் குடியிருப்புகள் அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை பெய்த கடும் மழை காரணமாக, சென் லெனாட்ஸ் மேல்பிரிவு
தோட்டத்தில் காட்டு லயம் என அழைக்கப்படும் இலக்கம் 33 தொடர் குடியிருப்பின் பின்பகுதியில் உள்ள 30 அடி உயரமான மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் யுவதி ஒருவர் மண்சரிவில் சிக்கி, தனது காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்ட
நிலையில் மீட்கப்பட்டார். இதன் காரணமாக, மண்சரிவு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட இத் தொடர் குடியிருப்பில் வசிக்கும், 12 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் சென் லெனாட்ஸ்  தோட்ட முன்பள்ளி கட்டடத்தில் பாதுகாப்பாகவும் தற்காலிகமாகவும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பில் வசிக்கும், 12 குடும்பங்கள் மழைக்காலங்களில் தொடர்ந்தும்
அச்சத்துடன் கடந்த 07 வருடங்களுக்கு மேல் வசிப்பதுடன் இம்முறை பாரிய பாதிப்புக்கு
உள்ளாகியுள்ளதஎன தெரிவித்தனர்.

தோட்ட நிர்வாகத்திடம் தமது நிலையை எடுத்துரைத்துள்ள போதிலும் சரியான தீர்வை பெற்று, மாற்று இடத்தில் பாதுகாப்பாக வாழ இடம் வழங்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தொடர்ந்தும் பாதுகாப்பான இடத்தில் வீடுகளை அமைத்து தம்மை வாழ வைக்க
நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .