2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கம்பனிகளுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரிக்கும்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் முழுமையாகக் கிடைக்கும் வரை,
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்கள் ஓயாது என, மலையக மக்கள் முன்னணி
தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஆர். இராஜாராம்
தெரிவித்தார்.

மஸ்கெலியா லக்கம் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பு, கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையிலே உள்ளது.
கம்பனிகளின் இத்தகைய தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் கடந்த 4 மாதங்களாக
தொடர்ந்து கொண்டே இருப்பதால் சகித்துக் கொள்ள முடியாத தொழிலாளர்களின்
போராட்டங்கள் நாளுக்கு நாள் தோட்டங்கள் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

எனவே, தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு
அரசாங்கம் தலையிட்டு, ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்க தகுந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

கம்பனிகளும் தமது கெடுபிடிகளைக் கைவிட்டு சுமூகமான நிலையில், தேயிலைத் துறையை
நடத்திச் செல்வதற்கு முன்வர வேண்டும். அதுவரை தொழிலாளர்களின் கவன ஈர்ப்புப்
போராட்டங்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X