2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிரிமெட்டிய மக்களுக்கு அசௌகரியம்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


டி. சந்ரு

கிரிமெட்டிய 476A கிராம அலுவலர் பிரிவு அலுவலகமானது, எந்நேரமும் பூட்டிய நிலையில்
காணப்படுவதால், கர்லிபெக், தம்பகஸ்தலாவ, எவோக்கா , கிரிமெட்டிய, டெஸ்போர்ட்B,
டெஸ்போர்ட்A ஆகிய 6 தோட்டங்களை சேர்ந்தவர்களும் பாரிய அசௌகரியங்களுக்கு
உள்ளாகியுள்ளனர்.

குறித்த கிராம உத்தியோகத்தர் அலுவலகத்துக்கு, புதிதாக நியமனம் பெற்றுள்ள உத்தியோகத்தர் மஸ்கெலியாவிலிருந்து வருகைத் தருவதால் உரிய நேரத்துக்கு அவர் அலுவலகத்துக்கு சமூகமளிப்பதில்லை.



அவர் அலுவலகத்துக்கு வருகைத் தந்தாலும் சுமார் 1 மணித்தியாலமே அலுவலகத்தில்
இருப்பதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. குறித்த கிராம உத்தியாகத்தர் இரண்டு வருடத்திற்கு மேலாக கிரிமெட்டிய கிராமசேவகர் பிரிவில் கடமையாற்றி வருகின்றார். எனினும் எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளும் பொது மக்களுக்கு
நன்மை பயக்கும் எந்தவிதமான சேவைகளையும் அவர் செய்து கொடுக்கவில்லை  என்றும்
தெரிவிக்கப்படுகின்றது.

இவருக்கு  எதிராக நானுஓயா பொலிஸ் பிரிவில் பல்வேறு முறைப்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளதுடன், மத்திய மாகாண ஆளுநரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மக்களுக்குச் சேவையாற்ற வேண்டிய இவ்வாறான கிராம உத்தியோகத்தர்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X