2025 டிசெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

சகோதரனை வன்புணர்ந்த சிறுவன்

Janu   / 2025 டிசெம்பர் 07 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை, தொம்பகஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலஓயா பஹத ஆராவ பகுதியில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன் தந்தை, ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அவர்களது, 12, 9 மற்றும் 5 வயதுடைய மூன்று மகன்களும் தங்களது, பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளதுடன் தந்தை அருகில் உள்ள அவர்களின் வீட்டில் தங்கியிருந்து ஆடை தொழிற்சாலையில் வேலைக்கு சென்றுள்ளார். அத்துடன் குறித்த வீட்டில் தந்தையின் சகோதரியின் 15 வயதுடைய மகனும் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (05) அன்று இரவு, தந்தை வேலை முடித்துவிட்டு, பாட்டி வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு அருகிலுள்ள வீட்டிற்குச் சென்ற போது ​​குழந்தை அழும் சத்தம் கேட்டு, மீண்டும் பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதன்போது 12 வயதுடைய சிறுவன் அழுது கொண்டிருந்துள்ளதுடன்  சகோதரியின் மகனான 15 வயதுடைய சிறுவனும் அருகில் இருந்துள்ளார்.

சிறுவனின் இரத்தப்போக்கு காரணமாக சிறுவன் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான பொலிஸாருக்கு தெரியவந்ததையடுத்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரான சிறுவனை கைது செய்வது தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

சுமனசிறி குணதிலக


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X