2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சட்ட ரீதியாக அணுகத் தயார்’

R.Maheshwary   / 2021 ஜூலை 19 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

சிறு வயதில் தொழிலுக்கு அமர்த்தப்பட்ட16 வயதான டயகமயைச் சேர்ந்த  சிறுமி ஜூட் ஹிசாலினியின் மரணம், தொடர்பாக மனித அபிவிருத்தி ஸ்தாபனமானது, மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தேசிய சிறுவர் உரிமை அதிகார சபை ஆகியவற்றில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர ஏற்பாடுகளை செய்துள்ளதாக, குறித்த ஸ்தாபனத்தின் தலைவர் பி.பி.சிவபிரகாசம் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ள அவர்,

“இந்தச் சிறுமியின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என  சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

“அதேநேரத்தில், சிறுவர் உரிமை சட்டம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் அறிந்திருக்கவில்லையா அல்லது சட்டத்தை மீறி, சிறுமியை பணிக்கு அமர்த்திருந்தாரா என்ற விடயமும் இன்று பேசும் பொருளாகியுள்ளது.

“எனவே, சிறுமியின் குடும்பத்தார் மனித அபிவிருத்தி ஸ்தாபன உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்ட விடயங்களின் பிரகாரம், சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையில், மனித அபிவிருத்தி தாபனம் இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

 

“அத்துடன், எமது ஸ்தாபனத்தின் ஊடாக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் தேசிய சிறுவர் உரிமை அதிகார சபை ஆகியவற்றில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர ஏற்பாடுகளை செய்துள்ளது” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .