2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தீர்மானிக்க வேண்டும்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

புவியரசன்

பெண் தொழிலாளர்கள் ஒருநாள் பேருக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவு தொடர்பாக,
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தீர்க்கமான முடிவை எட்டி, தோட்டங்களை நிர்வகிக்கும்
நிர்வாகங்களுடன் பொது உடன்பாட்டுக்கு வருவதன் மூலமே பெண் தொழிலாளர்கள் மன
அழுத்தமின்றி தொழில்புரியும் நிலையேற்படுமென ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின்
பொதுச் செயலாளர் ஆ.முத்துலிங்கம் தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், தொழிலாளர்கள் 20கிலோகிராமிற்கு குறைவாக கொழுந்து பறிக்கும் போது கிலோ ஒன்றிற்கு, 40 ரூபாய் வீதம் தோட்ட நிர்வாகங்கள் வழங்குகின்றன. இன்றைய பொருளாதார நிலைமை, விலைவாசியுடன் ஒப்பிடுகையில் இது தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்.

நாளொன்றில் கொழுந்து நிறுக்கும் 3 சந்தர்ப்பங்களில்  கொழுந்து நிறுக்கப் பயன்படும் தட்டிற்காக ஒவ்வொரு தொழிலாளர்களிடமிருந்தும் ஒரு தடவைக்கு 2 கிலோகிராம் வீதம் 6 கிலோகிராம் கொழுந்து தோட்ட நிர்வாகங்களால் கொள்ளையிடப்படுகின்றது.

இதன்காரணமாக தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. தொழிலாளர்கள் தோட்ட
நிர்வாகங்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, அவர்களின் தொழில் உரிமையை மீறும் வகையில் பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்து போராட்டத்தை நசுக்க தோட்ட நிர்வாகங்கள் முயல்கின்றன.

இந்நிலைமை நீடித்தால் தொழிலாளர்கள் பகடைகாய்களாக தோட்டங்களில் தொழில்புரிய
வேண்டிவரும்.எனவே இவ்விடயத்தில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு தோட்டத்
தொழிலாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .