2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவை- கெம்பியன் வரையிலான வீதியினை அபிவிருத்தி செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த  வீதியின் கார்பட் இடும் நடவடிக்கைக்காக,இந்த  அரசாங்கத்தால் அதிக நிதி  ஒதுக்கப்பட்டுள்ள போதும் வீதியின் அபிவிருத்தி பணிகள், எவ்வித முன் அறிவிப்புமின்றி
இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, சென் ஜோன்டிலரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள களஞ்சியசாலையில் உள்ள சில உபகரணங்களை கொண்டு செல்லுமுற்பட்டபோது, குறித்த வீதியில் பணிபுரிந்த
பணியாளர்கள் அதனைத் தடுத்து,  களஞ்சியசாலையைப் பூட்டியுள்ள நிலையில், அரசாங்கத்தால் இந்தப் பணிகளுக்கு  பணம் வழங்கப்படாமையே இத்திட்டத்தை இடைநிறுத்தியமைக்கு காரணம் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.

 இதேவேளை, குறித்த வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களுக்கு 2 மாதமாக சம்பளம் வழங்கப்படாமையால், அவர்களால் இன்று (30) எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

 

 

 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .