Janu / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிட்வா புயலினால் ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தில் பெரும் சேதத்திற்குள்ளான மாத்தளை மாவட்ட கம்மடுவ பிரதேசத்தில் பலியானவர்களைத் தவிர எஞ்சிய மக்கள் பிரதேசத்தையே விட்டுச் சென்று விட்டனர். இந்நிலையில் கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் கட்டாக்காலி நாய்களின் கடும் பசியை போக்கி அவற்றைப் பாதுகாப்பதற்காகவும் உணவு அளிக்கப்பட்டது.
அனர்த்தத்தில் பேரவலம் நிகழ்ந்த கம்மடுவ பிரதேச மக்கள் அடுத்த மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் கிராமத்தை விட்டு சென்று விட்டனர்.
கிராமத்தில் ஒருவரும் நாய்களுக்கு உணவளிக்க இல்லை என்பதால் கிராமத்தில் இருந்த வயோதிபரான ராஜாவின் ஒத்துழைப்போடு மாத்தளை நலன் விரும்பிகள் சிதம்பரம் ஜெயபிரகாஷ் மற்றும் மகேந்திர ராஜன் மகாலிங்கம். ஆகியோர் உணவு சமைத்து நாய்களுக்கு உணவளித்துள்ளனர்.
தம்மை வளர்த்த காணாமல் போனோரை தேடி வளர்ப்பு நாய்கள் அவர்கள் வசித்த வீடுகளைப் பார்த்து குரைத்த வண்ணம் அங்குமிங்கும் செல்வது மற்றுமொரு நெகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
மெய்யன்


9 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
41 minute ago
2 hours ago
2 hours ago