2025 ஜூலை 19, சனிக்கிழமை

புதிய அங்கத்தவர்கள் தெரிவு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் திம்புள்ள கிளைக்கான புதிய அங்கத்தவர்கள் தெரிவு, தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலய கலாசார மண்டபத்தில், நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஜனநாயக முறையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பும் இடம்பெற்றுள்ளது. சங்கத்தின் இணைத் தலைவர் பதவிக்கு இருவரும் மத்தியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஆறு பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கமைய, சங்கத்தின் திம்புள்ள கிளை இணைத்தலைவராக புஷ்பராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிளையின் பொருளாளராக எஸ்.கமல் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், கணக்கு பரிசோதராக டபிள்யூ.ஜெயசேகர தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் திம்புள்ள கிளையில் 58 தோட்டங்களைச் சேர்ந்த 1,200 அங்கத்தவர்கள் உள்ளதோடு, இவர்களில் கணிசமானோர், வாக்களிப்பிலும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X