2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

’பெருந்தோட்டத்துறையை கட்டியெழுப்ப தயாராகவும்’

Editorial   / 2020 மே 13 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலக்குடன் செயற்பட்டால், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு விரிவானதொரு பங்களிப்பை வழங்கும் இயலுமை பெருந்தோட்டத் துறையிடம் உள்ளதென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவந்து, பொருளாதாரச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்டத்துறைக் கட்டியெழுப்புவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்து, நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரைத்த ஜனாதிபதி, பெருந்தோட்டத் துறையினால் உற்பத்தி செய்யமுடியுமான பல விடயங்கள் அநாவசியமாக இறக்குமதி செய்யப்படுவதாகவும் சுதேச பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் பெருந்தோட்டத் துறைக்கு முக்கியமானதொரு பொறுப்பு உள்ளதென்றும், அதனை விளங்கிக்கொண்டு நட்டத்தில் இயங்கும் தோட்டங்களை இலாபமீட்டும் நிலைக்கு விரைவாக முன்னேற்ற வேண்டும் என்றும் கூறினார்.

அனைத்துப் பெருந்தோட்டப் பயிர்களையும் உயர் நியமங்களுடன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை நட்டமடைவதற்கான காரணத்தை ஆராய்ந்து, விரைவில் இலாபமீட்டும் நிலைக்குக் கொண்டுவரும் வகையில் பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் வசமுள்ள மர ஏற்றுமதியை முறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X