2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மழையில் அடித்து வரும் கழிவுகள் நீர்த்தேக்கத்தில் தேக்கம்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி பெருமாள்

கடந்த சில வாரங்களாக மலையகத்தில்  பெய்துவரும்  கனமழையின் காரணமாக,  மத்திய மலைநாட்டில் உள்ள  நீர்த்தேக்கங்களுக்கு நீரை வழங்கும்  ஆறுகள்,  ஓடைகளில் ஊடாக அடித்துச் செல்லப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் அதன்  கரையோரப் பகுதிகளில் தேக்கமடைந்துள்ளன.

 .குறிப்பாக மவுசாக்கலை நீர்த்தேக்கத்துக்கான நீரைக்  கொண்டு செல்லும்   மறே ஓயா,காட்மோர் ஓயா, நல்ல தண்ணீர் ஓயா, சாமிமலை ஓயா உள்ளிட்ட பல ஆறுகளும் சிற்றாறுகளும் இணையும் மவுசாக்கலை நீர்த்தேக்க பகுதியிலேயே,  இவ்வாறான கழிவுகள் தேங்கிக் காணப்படுகின்றன.


இதுகுறித்து நீர்மின் நிலைய உயர் அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,  நீர் ஓடைகளிலும்,  நீர்தேக்கத்துக்கு நீர் வழங்கும் ஆறுகளிலும், கழிவுகளை போட வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதனால் நீர்த்தேக்கத்தில்  வாழும் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றார்.

இவ்வாறு தேக்கமடைந்துள்ள  கழிவுகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர்,  இலங்கை மின்சார சபையின் பாதுகாப்பு பிரிவினர்,மவுசாக்கலை  இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் அதிரடிப்படையினர், மஸ்கெலியா பொலிஸார்,மீன்பிடிதுறையினர் ஈடுபட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .