2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

லபுக்கலை தோட்டத்துக்கும் சுகாதார வசதிகளை வழங்கவும்

R.Maheshwary   / 2021 ஜூன் 06 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பொது சுகாதார அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட மூன்று தோட்ட பிரிவுகளைக் கொண்ட லபுக்கலை தோட்ட மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும; என  கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் பெரியசாமி செந்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொத்மலை ஆடை தொழிற்சாலை ஊடாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, லபுக்கலை தோட்டத்தில் இருந்து  குறித்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய யுவதிகளின் 09 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், லபுக்கலை தோட்டத்தில் கொரோனா அச்சம் நிலவுவதாகவும்,லபுக்கலை தோட்டத்துக்கு தொற்று நீக்கிகளை தெளித்து சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க பிரதேசத்துக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் பிரிவினரும்,கொத்மலை பிரதேச சபையும் முன்வர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

இதேவேளை  லபுக்கலை,வெதமுல்லை,முறுக்கு ரம்பொடை, பூச்சிகொடை,தவலன்தன்னை,மற்றும் புரட்டொப் ஆகிய தோட்டப்பகுதிகளும் கொத்மலை ஆடை தொழிற்சாலை கொத்தணியில் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சுகாதார வசதிகள் இன்றி வாழ்வாதார சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே  அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் இவர்களுக்கு முறையாக சென்றடைய கொத்மலை பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .