2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஹிசாலினி’ பாடம் கற்பிக்க வேண்டும்

R.Maheshwary   / 2021 ஜூலை 28 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

 மலையக சிறுமி ஹிசாலினியின் மரணம் மலையக சமுதாயத்திற்கு படிப்பினையைப் புகட்டுவதாக இருக்க வேண்டும் என அப்துல் கலாம் ஞாபகார்த்த உலகளாவிய  அறக்கட்டளை, சர்வதேச மனித உரிமைகள் மற்றும் நலன்புரி அபிவிருத்தி அறக்கட்டளை என்பன இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

மேற்படி அமைப்புக்களின் தலைவர் என். கருணாகரன்  வெளியிட்டுள்ள இவ்வூடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

 நேர்மையான விசாரணை நடைபெறும் என நாம் நம்புகிறோம். இருப்பினும் இப்படியான நிலைமைகள் ஏற்பட மலையக சமூகமும் ஒரு காரணமாகும். எமக்கும்  பொறுப்புண்டு. காலாகாலமாக மலைய சிறுவர் சிறுமியர்களை தலைநகரிலுள்ள பங்களாகளுக்கு வேலைக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 இதற்கு பொருத்தமான மாற்று வழிகளை மலையக சமூகத்தலைவர்கள்  முன்வைக்க வேண்டும். 

எனவே, நடந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு நேர்மையான விசாரணை நடை பெற வேண்டும் என எமது அமைப்புக்கள் வேண்டுகின்றன. இதன் பிறகு மலையக சமூகத்தில் இப்படியான நிலைமைகள் ஏற்படாதிருக்க மலையக மக்கள் தமது உறவுகளை பாதுகாத்து வீட்டு வேலைக்கு அனுப்புவது தொடர்பான பொருத்தமான பொருளாதார மாற்றுவழிகளை  கண்டறிய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .