2025 ஜூலை 19, சனிக்கிழமை

நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய மாற்றுவலுவுடையவர் கைது

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.கரவெட்டி சாமியன் அரசடியில் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிய நெல்லியடி கிழக்கை சேர்ந்த பார்வையிழந்தவரை (வயது 35), திங்கட்கிழமை (06) கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமத்.சி.பெரேரா தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர், அண்மையில் வீடு மாறிச் செல்லும் போது, பக்கத்து வீட்டிலிருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பில் பக்கத்து வீட்டுக்காரர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபரை கைது செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X