2025 ஜூலை 19, சனிக்கிழமை

3ஆம் கட்ட மீள்குடியேற்ற காணிகள், நாளை பார்வையிடப்படும்

George   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்த காணிகளில், 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்ற, புதிய அரசாங்கத்தின் அறிவித்தலுக்கமைய அவற்றின் 3ஆம் கட்ட காணிகளை மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், நாளை செவ்வாய்க்கிழமை (07) சென்று பார்வையிடவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், திங்கட்கிழமை(06) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுக்கமைய வளலாய் மற்றும் வசாவிளான் பகுதியிலுள்ள 430 ஏக்கர் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அக் காணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்களிடம் கையளித்தார்.

இந்நிலையில் மிகுதிக் காணிகளினையும் விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அந்தக் காணிகளில் இருந்து வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய அந்தக் காணிகளை, நாளை செவ்வாய்க்கிழமை (07) நேரில் சென்று பார்வையிடவுள்ளோம். எவ்வளவு காணிகள் மூன்றாம் கட்டமாக விடுவிக்கப்படும் என்ற உறுதியான தகவல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. 

மக்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் எவ்வளவு காணிகள் விடுவிக்கப்படும் என்பது தொடர்பான விபரங்கள் சரியான முறையில் வெளியிடப்படும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X