Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபைக்கு மின்சாரம் வழங்கும் நொர்தேன் பவர் நிறுவனத்தின் சுமார் 1½ இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்வயர்கள் திங்கட்கிழமை (06) இரவு வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பொறியியலாளர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நொர்தேன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணம் எனக்கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் 11 பேர் மல்லாகம் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குக்கமைய நொர்தேன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூட நீதிமன்றம் கடந்த ஜனவரி 27ஆம் திகதி உத்தரவிட்டது.
நிறுவனத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டபோதும், அதன் பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் நிறுவன ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை (06) நிறுவனத்தின் மின்வயர்கள் திருடப்பட்டுள்ளன. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
8 minute ago
14 minute ago
18 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
18 minute ago
8 hours ago