2025 ஜூலை 19, சனிக்கிழமை

வடமாகாண சபையில் புதிய உறுப்பினர்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் மேரி கமலா குணசீலனுக்கு பதிலாக புதிய உறுப்பினராக எம்.பி.நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற போது, புதிய உறுப்பினர் சபைக்கு வருகை தந்தார்.

சுழற்சிமுறையில் வடமாகாண சபை உறுப்பினர் பதவியை வகிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்ற போது, மேரிகமலா குணசீலன் உறுதிமொழி வழங்கியிருந்தார். அதனடிப்படையில் ஒரு வருடம் நிறைவடைந்ததையடுத்து அவருடைய உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.

அவரது இடத்துக்கு முன்னாள் வவுனியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை சேர்ந்த இவர் கடந்த வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X