Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 மே 13 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
பிரமிட் முறையிலான நிதி சேகரிப்பில் 3 கோடி ரூபாவினை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று புத்தளம், மகாகும்புக்கடவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பிரமிட் முறையில் சுமார் 400பேரிடம் இவர்கள் இந்த நிதியினை சேகரித்து மோசடி செய்துள்ளார்கள் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
புத்தளம், மகாகும்புக்கடவல, ஆனமடுவ, வனாத்தவில்லுவ போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்தே இவர்கள் இந்த நிதியினைச் சேகரித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களிருவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .