2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் படையணிக்கு வடமத்திய மாகாணத்திலிருந்து 800பேர் இணைப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 27 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாணத்திலுள்ள இளைஞர் படையணிகளுக்கு 800 இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான பாடத்திட்டங்கள் யாவும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கலாவௌ இளைஞர் படையணி நிலையத்தின் பொறுப்பதிகாரி மேஜர் டீ.ஏ.இலங்கசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படவுள்ளவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா கொடுப்பனவுடன் சீருடை மற்றும் தங்குமிட வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

அநுராதபுரம், கலாவௌ, கெக்கிராவ, அரலகங்வில ஆகிய பகுதிகளிலுள்ள இளைஞர் படையணி நிலையங்களுக்கே இவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு, தலைமைத்துவப் பயிற்சி, கணினிப் பயிற்சி உட்பட பல துறைகளைச் சார்ந்த பயிற்சிகளையும் வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X